மாரடைப்பு காரணமாக பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி.!
Renowned singer Asha Bhosle hospitalized following a heart attack
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
93 வயதான பாடகி ஆஷா போஸ்லே, பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி கவனம் பெற்றவர். இவர் 02 தேசிய விருதுகள், தாதா சாகேப் பால்கே, பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றவர்.
இசை வரலாற்றில் அதிக பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். 'ஹேராம்' படத்தில் இடம்பெற்ற 'நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி', 'அலைபாயுதே' படத்தில் 'செப்டம்பர் மாதம்', 'சந்திரமுகி' படத்தில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் மாரடைப்பு காரணமாக பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குரலால் இந்திய சினிமாவை வசப்படுத்தி கட்டுப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Renowned singer Asha Bhosle hospitalized following a heart attack