பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையிலான இடைவெளி விரிவடைந்துள்ளது; ஐ.நா. அறிக்கை..! - Seithipunal
Seithipunal


முக்கிய உலகளாவிய நிதி நிறுவனங்களைச் சீரமைப்பது உட்பட, பல நாடுகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாகவே இருக்கின்ற நிலையில்,  பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையிலான இடைவெளி மேலும் விரிவடைந்து வருகிறதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்பெயினின் செவில்லே நகரில் ஐ. நா. உறுப்பு நாடுகள் கூடி ஆண்டு நிதி இடைவெளியைக் குறைக்க ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

குறித்த ஒப்பந்தம் இன்னமும் நிறைவேற்ற படாததற்கு முக்கிய காரணம் உலக நாடுகளில் நடக்கும் மோதல்கள் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான் போர் மற்றும் உலக நாடுகளில் நடக்கும் மோதல்களால் உலகப் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. இந்த நிலையில், வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கான நிதியுதவியை 23 விழுக்காடு குறைத்துள்ளன.

அந்தவகையில், அமெரிக்காவின் நிதியுதவி 59 விழுக்காடு சரிந்துள்ளது என ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  ஏழை நாடுகளின் ஏற்றுமதி மீதான வரிகள் 09 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் விதித்த கூடுதல் வரிகள் வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கியுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UN report states that the gap between rich and poor nations has widened


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->