மழை வருதோ இல்லையோ நங்கள் தயாராக இருக்கோம் - முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட எழில் நகரில் மறுசீரமைக்கப்பட்ட மழலையர் பள்ளி வகுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது;- "நாடாளுமன்ற கூட்ட தொடரில் என்ன பேச வேண்டும் என்பது குறித்து எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தேவையான விஷயங்களை நாடாளுமன்றத்தில் பேசுவதில் எம்.பி.க்கள் கவனம் செலுத்துவார்கள்.

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மழை வருதோ வரலையோ, அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது" என்றது தெரிவித்துள்ளார்.

அப்போது செய்தியாளர்கள் பக்கத்தில் இருந்து அதானி விவாகரத்தில் தமிழக அரசு தனது நிலையை தெரிவிக்க வேண்டுமென ராமதாஸ் தெரிவித்தது குறித்து கேள்வி எழுந்தது. அதற்கு அவர், "அரசியல் ரீதியாக ஒவ்வொரு நாளும் அறிக்கை வாயிலாக ராமதாஸ் பேசி வருகிறார். அதற்கு தற்போது பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை." என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chief minister mk stalin speech about govt ready to face rain


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->