திமுக நிர்வாகிக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனைக்கு விரைந்த திமுகவினர்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். கோயம்புத்தூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டரின் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். நேற்று முன்தினம் முதல் வருமான வரிசோதனை நடைபெற்றது.

அவருக்கு சொந்தமாக உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. ஈரோட்டில் உள்ள நந்தா கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வரும் நிலையில், இந்த சோதனையில் மொத்தமாக 100 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 

இந்நிலையில், இன்று மூன்றாவது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், பையா கவுண்டருக்கு பிற்பகல் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

விஷயமறிந்த திமுக தொண்டர்கள்  மருத்துவமனைக்கு விரைந்தனர். இதன் காரணமாக பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சிகிச்சையில் இருந்த பையா கவுண்டர் எழுந்து வந்து மக்களை சந்தித்து, சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் திரும்பி விடுவதாகவும், 3 நாட்களாக தன்னுடன் இருப்பதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். 

மக்களும் கலைந்து  சென்றனர். இதனிடையே மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டிருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது சோதனையை நிறைவு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chest Pain toDMK Paiya Gounder while IT enquirers in his place


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->