#BREAKING :: நெல்லை மாவட்ட எஸ்.பியை கைது செய்ய தடை..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தை அடுத்த பாளையங்கோட்டை வட்டம் சிவந்திபட்டு கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்பவர் தன் நிலத்தை ஆக்கிரமித்து போலி ஆவணத்தின் வாயிலாக பெயர் மாற்றம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். அந்த புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து இந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நெல்லை மாவட்ட எஸ்.பிக்கு கடந்த ஜூன் 10ஆம் தேதி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அந்த நோட்டீசுக்கு எந்த பதிலும் அளிக்காததால் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பின்னரும் ஆணையத்தின் நோட்டீஸ் இருக்கு பதிலளிக்காததால் சம்பந்தப்பட்ட கோப்புகளுடன் அக்டோபர் 10 ஆம் தேதி ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு நெல்லை மாவட்ட எஸ்.பிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் சம்மன் அனுப்பியும் நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணன் ஆஜராகவில்லை. அதன் காரணமாக நவம்பர் 30ஆம் தேதி ஆஜராகுமாறு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அன்றைய தினம் அவர் ஆஜராகாமல் நெல்லை மாவட்ட எஸ்.பிக்கு பதிலாக ஏ.டி.எஸ்.பி மாரிராஜன் ஆஜரானார். இதனால் கடுப்பான ஆணையம் தமிழக எஸ்.சி எஸ்.டி ஆணைய சட்டம் 2021 பிரிவு 9ன் படி நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணனுக்கு 500 ரூபாய் அபராதமும் அவரை கைது செய்து வரும் 28ஆம் தேதி ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜர் படுத்துமாறு தென் மண்டல ஐ.ஜிக்கு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் விசாரணை அறிக்கையை படிக்காமல் கைது நடவடிக்கைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று எஸ்.பிக்கு பதிலாக கூடுதல் எஸ்.பி ஆஜர் ஆகலாம் என அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதலில் மிரட்டும் வகையில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு விட்டு அதன் பின்னர் தான் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என எஸ்.பி தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கைது நடவடிக்கைக்கு எதிராக தடை விதித்துள்ளார். மேலும் எஸ்.சி/எஸ்.டி ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC restrains Nellai district SP from arresting


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->