சென்னை-மைசூர் புல்லட் ரயில் சேவை.!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வரும் 2026 ஆம் ஆண்டு முதல் புல்லட் ரயில் சேவை தொடங்குவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது மும்பையில் இருந்து அகமதாபாத் வரை செல்லும் வழிதடத்தில் முதல் புல்லட் ரயில் இயக்க உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் இரண்டாவது புல்லட் ரயில் வழித்தடத்தை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் இடையே இந்தியாவின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் தொடர்பான ரூட் மேப் தற்போது வெளியாகி உள்ளது.

மொத்தம் 435 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தாலத்தில் புல்லட் ரயிலானது அதிகபட்சமாக 350 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மைசூர் பெங்களூர் என முக்கியமான ஒன்பது நிறுத்தங்களை கொண்டுள்ளது இந்த புல்லட் ரயில் வழித்தடம்.

 

சென்னை மைசூர் புல்லட் ரயில் திட்ட விவரங்கள்:

மொத்த தூரம்: 435 கிலோமீட்டர்

அதிகபட்ச வேகம்: மணிக்கு 350 கிலோமீட்டர்

செயல்பாட்டு வேகம்: மணிக்கு 320 கிலோமீட்டர்

சராசரி வேகம்: மணிக்கு 250 கிலோ மீட்டர்

தண்டவாளத்தின் அகலம்: 1435 மில்லி மீட்டர்

சிக்னல் கட்டுப்பாடு: DS-ATC

பயணிகளின் எண்ணிக்கை: 750 பேர் 

பாதுகாப்பு: பூகம்பம் ஏற்பட்டால் தானாக நிற்கும், நிலநடுக்கம் கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை அமைப்பு கொண்டது

நிலையங்கள்: 9

நிற்கும் இடங்கள்: சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூர், சென்னபட்னா, மாண்டியா, மைசூர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai to Mysore bullet train route blue print out


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->