வலிமை அஜித் என்ற நினைப்பு., சென்னையில் அரங்கேற்றம் நிகழ்த்திய வாலிபர்.! பதறவைக்கும் காணொளி.! - Seithipunal
Seithipunal


சென்னை புத்தாண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் பயணம் மேற்கொண்ட வாலிபரை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் அஜித்குமார் நடித்து வெளியாகவுள்ள 'வலிமை' திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகியது. இந்த ட்ரெய்லரில் நடிகர் அஜித் குமார் பைக் வீலிங் உள்ளிட்ட பல சாகசங்களை செய்துள்ளார்.

இதனை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு சென்னையில் புத்தாண்டு நள்ளிரவில் பைக் வீலிங் செய்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தரமணி சேர்ந்த இளைஞர் ஒருவர், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், பைக்கில் ஃப்ரண்ட் வீலிங் செய்து அதிவேகத்தில் சென்றுள்ளார். 

இதனையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையிலும், சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களின் அடிப்படையிலும், இருசக்கர வாகனத்தின் இருசக்கர வாகனத்தின் எண்ணை கொண்டு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் தரமணி சேர்ந்த விஜயன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவரின் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai tharamani bike racer arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->