சிக்னல் கோளாறால் சென்னை-தாம்பரம் ரெயில் சேவை முடங்கல்...! காலை நேரத்தில் பயணிகள் அவதி
Chennai Tambaram train service disrupted due signal fault Commuters suffer morning
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரெயில் சேவை இன்று திடீரென பாதிக்கப்பட்டது.
தொழில்நுட்ப சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரெயில்கள் சீராக இயங்க முடியாமல், பல இடங்களில் இடைநிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து செல்ல வேண்டிய ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

குறிப்பாக காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு அவசரமாக புறப்பட்டவர்கள் செய்வதறியாமல் திண்டாடினர்.
மேலும், சில இடங்களில் ஒரே தண்டவாளத்தில் ரெயில்கள் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.
இதனுடன், சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் நிலையத்தில் இன்று முதல் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, 5 மற்றும் 6-வது நடைமேடைகள் வழியாக ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுவும் பயணிகள் நெரிசலை மேலும் அதிகரித்துள்ளது.மொத்தத்தில், காலை நேர ரெயில் சேவை தடங்கலால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்தனர்.
English Summary
Chennai Tambaram train service disrupted due signal fault Commuters suffer morning