ஆபாசமாக பேசி பிராங்க்... இவர்கள் மட்டுமா?.. இன்னும் நிறையா..! - Seithipunal
Seithipunal


தங்களின் யூடியூப் சேனலை பிரபலமாவதற்கு, யூடியூப் சேனல் உரிமையாளர்கள் கையாளும் முறைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆபாசமாக பேசி பேட்டி எடுத்தல், முத்தம் கொடுத்தால், பிராங்க் என்று பலவிதமான செயல்களில் ஈடுபட்டு, தங்களது யூடியூப் சேனலை பிரபலப்படுத்தி வருகின்றனர். உண்மையில்லாத செய்திகளும் இந்த வகையான யூடியூப் சேனல்களில் அதிகளவு வெளியிடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சமீபத்தில் பெண்ணிடம் ஆபாசமாக பேட்டி எடுக்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வந்தது. மேலும், இந்த யூடியூப் சேனலை சார்ந்தவர்கள் சென்னையில் உள்ள பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வரும் பெண்களை விரட்டி, ஆபாசமான கேள்விகளை கேட்டு பதில் கூறுமாறு தொல்லை தருவதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. இது தொடர்பாக பெசன்ட் நகர் கடற்கரையில் வியாபாரியாக பணியாற்றி வந்த பெண் ஒருவரும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாஸ்திரி நகர் காவல் துறையினர், பேட்டி எடுத்த இளைஞர் மற்றும் கேமராமேன் ஆகியோரை மீட்டு விசாரணை செய்தனர். இதில், கேமராவில் பெண்களின் அனுமதி இல்லாமலேயே பேட்டி கொடுங்கள் என்று தொல்லை செய்து, ஆபாசமாக கேள்வி கேட்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. பொது இடத்தில் ஆபாசமாக பேசிய யூடியூப் சேனலை சார்ந்த நிகழ்ச்சி தொடர்பாளர் அசேன் பாட்ஷா, கேமராமேன் பாபு மற்றும் உரிமையாளர் தினேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இவர்கள் மீது 4 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கைது செய்யப்பட்ட அசன் பாஷா பெண்களிடம் உங்களுக்கு எந்த மாதிரியான பையனுக்கு பிடிக்கும் என்று கேள்வி கேட்டு, உன்னை மாதிரியான பையனை பிடிக்கும் என்று முத்தம் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை போன்று பல யூடியூப் பேர்வழிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

முந்தைய காலங்களில் யூடியூப் சேனல்களை பொருத்தவரையில் சுற்றுப்புற சூழ்நிலை, சுகாதாரம், உணவுமுறை, மருத்துவம், அரசு திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு விடியோக்கள் என்று பலவகையான விடியோக்கள் வெளியாகி நல்ல செயல்களை செய்து வந்தனர். அடுத்தடுத்து வளர்ந்து வரும் பிற யூடியூப் சேனல்களிடமிருந்து, தனது நிறுவனத்தை முன்னிறுத்திக் கொள்ள ஆபாசமாக பேட்டி எடுப்பது, பெண்கள் மற்றும் ஆண்களிடம் அந்தரங்க விஷயத்தை கேட்பது என்று எல்லை மீறிச் சென்று வருகின்றனர். 

மனிதனிடம் மனிதம் இருக்கிறதா? என்று சாலையில் அடிபட்டு விழுவது போல துவக்கத்தில் எடுக்கப்பட்ட பிராங்க், சாலையில் எதோ ஒரு பரபரப்பில் செல்கையில் இடைமறித்து பிரச்சனை செய்து மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிய பிராங்க், காதல் பிராங்க், பேய் பிராங்க், பைத்தியக்காரன் பிராங்க் என்று பல அத்துமீறல்களை செய்து வருகின்றனர். இவ்வாறு எடுக்கப்பட்ட விடீயோக்களில் 80 விழுக்காடு நிகழ்வுகள் அனைத்தும் அவர்களால் சித்தரிக்கப்பட்டு, அவர்களுக்கு தெரிந்த நபர்கள் மட்டுமே அதில் வழிப்போக்கர் போல நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் மக்கள் மனதில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தி, இந்த சமூகத்தை எந்தவிதமான பாதைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது என்றாலும், இவர்களின் செயல்கள் அவ்வப்போது தனது சுயரூபத்தையும் வெளிப்படுத்தி வருகிறது. 

உலகிலேயே இல்லாத புரட்சி எல்லாம் பேசி, மக்களிடையே வினோதமான கலாச்சாரத்தை விதைத்து வரும் இவர்களின் செயல்பாடுகள், என்ன மாதிரியான பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது இன்னும் சில வருடங்களில் நாம் கண்கூடாக பார்க்கும் அளவிற்கு நடக்கும். அந்த வகையான செயல்கள் ஏதும் நடக்காமல் இருக்க, இப்போது சுதாரித்து செயல்பட்டு இவர்களை முடக்கினால் நலம்.

தற்போது கைதாகியுள்ள ஒரேயொரு யூ டியூப் சேனல் குழுவினர் மட்டுமே.. இதனைப்போன்று தமிழகத்தில் பல நூற்றுக்கணக்கான சேனல்கள் மக்களிடம் அத்துமீறி வருவதும் குறிப்பிடத்தக்கது. அவர்களையும் காவல் துறையினர் விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுத்தால் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். மக்கள் இவர்களுக்கு எதிராக செயல்பட்டால் நிலைமை விபரீதம் தான் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Talkies Team Arrest by Police Abusing Words Illegal Capture prank


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal