வடகிழக்கு பருவமழை விடைகொடுக்கும் காலம் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு.! 
                                    
                                    
                                   Chennai Regional Meteorological Center Announce No Rain Tamilnadu 17 Jan 2021 
 
                                 
                               
                                
                                      
                                            சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தெற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரி கடல் பகுதி வரை நீடிப்பதால், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வரும் 18 ஆம் தேதி, 19 ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதிகளைப் பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில், வரும் 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனி மூட்டமும் நிலவும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 21 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். 
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில், புதுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் மணமேல்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் மானாமதுரை, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆகிய பகுதியில் இரண்டு சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவ மழை தென் மாநிலங்களில் இருந்து வரும் 19 ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       Chennai Regional Meteorological Center Announce No Rain Tamilnadu 17 Jan 2021