சென்னையில் திடீரென சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள்! - Seithipunal
Seithipunal


சென்னை: சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் உள்ள நகை கடையின் உரிமையாளர், முறையாக வருமான வரியை கட்டாமல் இருப்பதாக வருமான வரித்துறையினருக்கு புகார் வந்துள்ளது.

இந்த புகாரின் பேரில், இன்று நகை கடை உரிமையாளர் வீட்டிற்கு காலை 7 மணி அளவில் சென்ற 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனையை மேற்கொண்டனர். 

இந்த சோதனையானது சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் உள்ள போலீசார் கண்காணிப்பில் நடைபெற்றது. இதன் காரணமாக தெருவில் பரபரப்பு நிலவியது. 

நகை கடை உரிமையாளரை, வருமான வரித்துறையினர் வாகனத்தில் உட்காரவைத்து சோதனையை செய்தனர். அப்போது, வீட்டில் இருந்த முறையற்ற ஆவணங்களை கைப்பற்றி, அது குறித்து நகை கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.
   
மேலும், இந்த நகை கடை உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறையினர் தற்போது வெளியிடாமல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai raid for income taxofficer


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->