சார் வாங்க, காக்காவை காப்பாத்துங்க.. சிறுவனின் நெகிழ்ச்சி செயல்..! - Seithipunal
Seithipunal


காத்தடியின் மாஞ்சா நூலில் சிக்கி காகம் உயிருக்கு போராடவே, காவலர்களை அழைத்த சிறுவன் காகத்தை விடுவிக்க உதவி செய்து இருக்கிறான். 

சென்னையில் உள்ள போரூரை அடுத்துள்ள காரம்பாக்கம் அருணாச்சலம் நகர் பகுதியை சார்ந்த சிறுவன் சஞ்சீவ் (வயது 11). சஞ்சீவ் ஆறாம் வகுப்பு பயின்று வரும் நிலையில், தினமும் காலை யோகா செய்யும் பழக்கத்தையும் கொண்டுள்ளார். 

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல யோகா மேற்கொள்ள மாடிக்கு செல்கையில், வீட்டின் அருகேயுள்ள மரத்தில் காகம் ஒன்று மாஞ்சா நூலிழை சிக்கிக்கொண்டு துடிதுடிப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து, காகத்திற்கு உதவி செய்ய நினைத்த சிறுவன், காரம்பாக்கம் காவல்துறை சோதனை சாவடிக்கு சென்றுள்ளான். 

அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரிகளிடம் விஷயத்தை தெரிவித்த சிறுவன், நீங்கள் உடனே வாங்க என்று காவல் அதிகாரிகளின் கையைப்பிடித்து தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான். இதனையடுத்து, காவல் துறையினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த இராமபுரம் காவல்துறை அதிகாரிகள் மாஞ்சா நூலில் சிக்கியிருந்த காகத்தை மீட்டு விடுவித்தனர். இதனையடுத்து, காகம் சிறகடித்து பறந்து சென்றது. மேலும், சிறுவனின் செயலுக்கு காவல் துறையினரும், தீயணைப்பு படையினரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Porur Child Sanjay Save Cock Life Struggle Loom


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->