சென்னை| காதலிக்க மறுத்த மாணவியின் முகத்தை சரமாரியாக வெட்டிய நாடக காதலன்!  - Seithipunal
Seithipunal


சென்னை அருகே மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியில் சேர்ந்தவர் கல்லூரி மாணவி கனிஷ்கா.

இவர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் நிலையில், இன்று காலை வழக்கம்போல கல்லூரிக்கு செல்வதற்காக, பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது திடீரென ஒரு இளைஞர் மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, மாணவியை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.

அதற்கு மாணவி அந்த இளைஞரை காதலிக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மாணவியின் முகம், தலை, கால் பகுதிகளில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாணவி கனிஷ்கா, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த வசந்த் என்ற நாடக காதலன், மாணவியை ஒரு தடையாக காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.

தன்னை காதலிக்குமாறு கடந்த சில வாரங்களாக மாணவியை நாடக காதலன் வசந்த் தொந்தரவு செய்து வந்ததும், மாணவி மறுத்ததால், நாடக காதலன் வசந்த், மாணவியை கொலை செய்யும் நோக்கில் கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Mevakkam drama Lover Attack College girl


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->