நிவர் போயி, நெருக்கி வரும் "புரெவி' ?..! வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அலர்ட்.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கும் நிலையில், ஏற்கனவே கணிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிவர் புயலை போலவே, அதிதீவிர புயல் போன்ற வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும், இது வலுப்பெற்று டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலான மழையை தரவல்லது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெறும் பட்சத்தில், கன்னியாகுமரியை தாக்கிய ஒக்கி புயல் போல இருக்கிறதா? என்பது குறித்த ஆய்வில் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் பட்சத்தில், அதற்கு " புரெவி " என்று பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Meteorological Center warn Next Storm


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal