சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!  - Seithipunal
Seithipunal


சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

மிக்ஜம் புயல் காரணமாக கடந்த 3, 4 தேதிகளில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ததால் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai including 17 districts rain 


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->