அன்பான மனைவி கிடைத்தும், பணத்தின் மீது காதல்.. கணவன், மாமியாரால் அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ஆவடி காமராஜர் நகர் பாரதி தெரு பகுதியை சார்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). இவர் மத்திய அரசு ஊழியராக இருந்து வருகிறார். இவரது மனைவி விமலா (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவர்கள் இருவருக்கும் கடந்த டிசம்பர் 2018 ஆம் வருடத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் முடித்த பின்னர் முத்துக்குமார் மற்றும் அவரது தாயார் கன்னியம்மாள் (வயது 70), விமலாவை பணியை துறந்துவிட்டு வர கூறி வற்புறுத்தியுள்ளனர். மேலும், வரதட்சணை கொடுமையும் நடைபெற்றுள்ளது.

இதனால் கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்த விமலா, வீட்டின் படுக்கையறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஆவடி காவல் துறையினர், விமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இந்த விஷயம் தொடர்பாக விமலாவின் தந்தை பழனி புகார் அளித்ததை அடுத்து, ஆவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார் மற்றும் அவரது தாய் கன்னியம்மாளை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai girl suicide due to dowry


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
Seithipunal