கொரோனா மூன்றாவது அலையை தடுக்க சென்னை மாநகராட்சி ஆலோசனை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில்) ஒரேநாளில் 16,813 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 23,08,838 ஆக உயர்ந்துள்ளது. 358 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 28,528 ஆக உயர்ந்துள்ளது. 32,049 பேர் பூரண நலன் பெற்றதை தொடர்ந்து, மொத்த பூரண நலன் பெற்றோரின் எண்ணிக்கை 20,91,646 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,223 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,22,052 ஆக உயர்ந்துள்ளது. சென்னை கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைபரவலில் இருந்து மீண்டு வந்துள்ளது. ஆனால், மூன்றாவது கொரோனா பரவல் அலை செப்டம்பர் மாதத்தில் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை நகரம் கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கிய தொடக்க நாட்களில் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்தது. மருத்துவனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து, நோயாளிகள் படுக்கை கிடைக்காமல் கடுமையாக சிரமப்பட்டனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது அலையில் விடுபட்டுள்ள கட்டமைப்புகளை மேம்படுத்தி, மக்களை மூன்றாவது அலையில் இருந்து காக்கவும், மூன்றாவது அலைபரவல் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Corporation Discuss about Corona Third Wave 11 June 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->