சென்னை | ஜிம் மாஸ்டரும், ஆணழகனுமான ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி காரணம்!
Chennai Akash Death case
சென்னை ஆவடி அருகே ஜிம் மாஸ்டரும், ஆணழகனுமான ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகளவில் அவர் மருந்து எடுத்துக் கொண்டதால் உயிரிழந்து உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஆணழகன் போட்டியில் பங்கேற்று வந்த 25 வயதான ஜூன் மாஸ்டர் ஆகாஷுக்கு திடீரென ரத்த வாந்தி ஏற்பட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் இரண்டு கிட்னிகளும் செயலிழந்தது தெரியவந்துள்ளது.

மேலும் கட்டுமஸ்தான உடலுக்காக ஆகாஷ் அதிகளவு ஸ்டீராய்டு மருந்தை எடுத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
உயிரிழந்த ஆகாஷ் கடந்த 26 ஆம் தேதி நடக்க இருந்த மாநில அளவிலான போட்டிக்கு தொடர்ந்து பயிற்சி ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும், அவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக சில மருந்துகளை எடுத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர் தொடர்ந்து இந்த மருந்துகளை எடுத்து வருவதாகவும், இதன் காரணமாக குடல், கிட்டினி போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மூச்சு விடுவதற்கு கூட சிரமப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷ் நேற்று இரவு உயிரிழந்தார்.