ஒரு சமூகத்தை திருடர்கள் என்று சொல்வது உண்மையை பேசுவதா? ராகுல்காந்தி விவகாரத்தில் பாஜக கேள்வி! - Seithipunal
Seithipunal


ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் "திருடர்கள்" என்று அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ராகுல்காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட நாட்டின் பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, ஆளும் பாஜகவை விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய அமைச்சர், பாஜக மூத்த தலைவர் தர்மேந்திர பிரதான் தெரிவிக்கையில், "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன், 

ஒரு சமூகத்தை துஷ்பிரயோகம் செய்வது உண்மையைப் பேசுவதற்கு சமமாக கருதப்படுகிறதா? மன்னன் போன்ற மனப்பான்மையை உண்மையாகக் கருதுகிறீர்களா? 

இதையெல்லாம் நீங்கள் உண்மையாகக் கருதினால், மல்லிகார்ஜுன் கார்கேக்காக நான் வருந்துகிறேன், ஆனால் ராகுல்காந்தி விவகாரத்தில் உண்மை என்ன என்றால், திமிர், சர்வாதிகாரம், மன்னன் மனநிலை தான். 

ராகுல்காந்திக்கு நீதிமன்றம் சரியான படத்தை புகட்டியுள்ளது" என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பேசிய பாஜக எம்பி அரவிந்த், "ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் சட்டரீதியாக போராட காங்கிரசுக்கு முழு உரிமை உண்டு. 

ஆனால், காங்கிரசார் ஆங்கிலேயர்கள் மக்களை பிரித்து ஆட்சி செய்யும் கொள்கையைப் பின்பற்றியுள்ளனர், மேலும் காங்கிரஸும் ஆங்கிலேயரால் நிறுவப்பட்டது தானே. 

1947ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சாதிய பாகுபாட்டின் அடிப்படையில் தான் காங்கிரசார் ஆட்சி செய்து வந்தனர். இது ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் எப்போதும் சாதி பாகுபாட்டின் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறது. அதற்க்கு ராகுல் காந்தி விலை கொடுத்துள்ளார்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Minister say about Rahul Gandhi disqualification


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->