உப்பளம் தொகுதியில் டாக்டர் கலைஞர் பிறந்த நாள் விழா நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்! - Seithipunal
Seithipunal


முத்தமிழ் அறிஞர், திமுக கழக தலைவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா கோலாகலமாக உப்பளம் தொகுதியில் அனிபால் கென்னடி எம் எல் ஏ தலைமையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது:

முத்தமிழ் அறிஞர், திமுக கழக தலைவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா,  புதுச்சேரி உப்பளம் தொகுதியில் உள்ள அனைத்து திமுக 25 கிளைகளிலும் ஊக்கமாகக் கொண்டாடப்பட்டது.

தமிழ் மொழிக்கு உயிரூட்டிய தலைவனாகவும், தமிழர் உரிமைக்குரிய சின்னமாகவும், பண்பாட்டு பாரம்பரியத்தின் பெருமையை உலகறிய வைத்த மாமனிதரின் நினைவை போற்றும் வகையில், அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கப்பட்டன.

திமுக மாநில துணை அமைப்பாளர் மற்றும் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அனிபால் கென்னடி அவர்களின் ஆணைப்படி, விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு உணவு, மோர், பழங்கள் ஆகியவை பகிரப்பட்டன. சிறார்களுக்காக லஞ்ச் பாக்ஸ்கள் வழங்கப்பட்டன.

சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். பக்தி உணர்வுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு, தலைவரின் சிந்தனைகளும் சாதனைகளும் தமிழகமும் தமிழர்களும் மறக்க முடியாதவை என்பதை மீண்டும் நினைவுபடுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Celebration of Dr Kalaignars birthday in the Uppalam constituency with the distribution of welfare schemes


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->