4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு - நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த மாதம் 6ம் தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு பா.ஜ.க. துணைத்தலைவரும், நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஓட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் என்பது தெரியவந்தது. 

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு,  நயினார் நாகேந்திரன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 

இந்த நிலையில், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நாளை மறுதினம் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. 

இதேபோல், இந்த வழக்கில் தமிழ்நாடு பா.ஜ.க. அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பா.ஜ.க. தொழில் பிரிவு துணைத்தலைவர் கோவர்த்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் உள்ளிட்டோரும் நாளை மறுதினம் விசாரணைக்கு நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CBCID samman send to nayinar nagendran


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->