#JUSTIN : நெட்டிசன்களே உஷார்.! வடமாநிலத்தொழிலாளிகள் பற்றிய பதிவு.. பாய்ந்த வழக்கு.! - Seithipunal
Seithipunal


வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகவும் அவர்கள் குறித்து அவதூறு பரப்பியதாகவும் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் பக்கங்களில் பதிவிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி அளித்துள்ளார்.

அத்துடன் அவரது பேட்டியில், பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும், அதிகப்படியான பார்வையாளர்களை பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் வதந்திகளை பரப்புகின்றனர். அவர்களது வங்கி கணக்குகளை முடக்க குறிப்பிட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வட மாநில தொழிலாளர்கள் சிலர் தாக்கப்படுவதைப் போல வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, அதன் மீது தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பீகார் மாநிலத்தில் இருந்து அதிகாரிகள் குழு ஒன்று தமிழகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டது.

அதன் அடிப்படையில் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்திய பின்பு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தற்போது பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case Filed On 3 of Nettisan Who Post About North Indian 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->