அதிமுக வேட்பாளர் கடத்தப்பட்ட விவகாரம்..!! முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிவு..!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உட்பட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் காரின் மீது தாக்குதல் நடத்தி வேடசந்தூர் அருகே அதிமுக வேட்பாளர் திருவிக என்பவரை மர்ம நபர்கள் கடத்தினர்.

இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போன்று சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதனை அறிந்த திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சட்டவிரோதமாக கூட்டம் கூடியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகள் கீழ் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 10க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 6:30 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் கல்வார்பட்டி காவல் நிலைய சோதனைச் சாவடியில் அதிமுக வேட்பாளர் திருவிகவை மர்ம நபர்கள் இறக்கி விட்டு தப்பி சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Case filed against vijayabaskar protested without permission


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->