முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்.!

தமிழகத்தில் கடந்த 21-ந் தேதி வரை சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. அப்போது கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கான பலன் கிடைக்க செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதேபோல், சட்ட மன்றத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் 12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்த மசோதாவும் நிறை வேற்றப்பட்டிருந்தது. இதற்கு அரசியல் காட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து திருமண மண்டபங்கள் மற்றும்  ஸ்டேடியங்களில் மது அருந்த அனுமதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாளை தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 

11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கான ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு ஒப்புதலுக்காக கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 

இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் என்னென்ன என்பதை கூட்டம் முடிந்ததும் தமிழக அரசு அதிகார பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cabinate meeting start tomarrow leadership of cm stalin


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->