ஆண்கள் மட்டும் பொங்கல் வைக்கும் விநோத திருவிழா எங்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் பொங்கல் பண்டிகைக்கு தனி இடம் உண்டு. இந்தப் பண்டிகை சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் மக்கள் தங்கள் நன்றியினை உரித்தாக்கும் விதமாகவே கொண்டாடப்படுகிறது.

நேற்று, அதிகாலையிலேயே பெண்கள் தங்கள் வீடுகளில் பல வண்ண கோலங்களை போட்டு, புதுப்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்று பொங்கல் வைக்கும் விநோத திருவிழா நடைபெற்றது. வானூர் அருகே நைனார் மண்டபம் பகுதியில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டும் பொங்கல் வைப்பது வழக்கம்.

அந்த வகையில், இந்தாண்டு அய்யனார் கோவிலில் ஒன்று கூடிய அப்பகுதி ஆண்கள், குளக்கரையில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boys only pongal celebrate in vilupuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->