ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்.. போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


14 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் வசிக்கும் 14 வயது பள்ளி மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பவானிசாகர் இலங்கை அகதி முகாமை சேர்ந்த ரகுநாதன் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியை மீட்க போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy cheat and sexual Harrasment for school girl


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal