#BREAKING :: திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையங்களில் தென் மாவட்டங்களுக்கான முக்கிய விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் விளங்குகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருச்சி விமான நிலையம் மூலம் வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று திருச்சி விமான நிலையத்தை மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விமான நிலைய ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் தமிழக காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் திருச்சி விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bomb threat to Trichy airport


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->