#கோவை || மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்..! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை பகுதியை சேர்ந்தவர் இளமுருகன். இவரது மகன் சீனிவாசன்(25) கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் விபத்தில் பலத்த காயமடைந்த சீனிவாசன் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், கடந்த 9-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார். இதையறிந்த சீனிவாசனின் பெற்றோர், மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர்.

இதைத்தொடர்ந்து, சீனிவாசனின் கல்லீரல், ஒரு சிறுநீரகம், இதயம், ஒரு சிறுநீரகம், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. மேலும் சீனிவாசனின் உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Body organs of a brain dead youth are donated in kovai


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->