தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோய் தாக்கம்.. அதிர்ச்சியில் மக்கள்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கருப்பு புஞ்சை நோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், கரும்பு பூஞ்சைநோயின் பாதிப்பு தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. சென்னையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 5 சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கத்தால் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த நோய் காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்கக் கூடியது என்பதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

black fungus in tamilnadu


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->