தேர்தல் கூத்து || அமித் ஷாவுக்கு பதில் பிரபல நடிகருக்கு போஸ்டர் ஒட்டிய பாஜகவினர்.!! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார். 

உத்திரபிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் அவர் மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். 

இதற்காக பாஜகவினர் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் அவரை வரவேற்று மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

பாஜக சார்பில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில் "மீண்டும் மோடி மீண்டும் மோடி ஏப்ரல் 12 மீண்டும் தமிழகம் வருகை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள்" என குறிப்பிட்டு அமிர்தாவின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் புகைப்படத்தோடு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. நடிகர் சந்தான பாரதிக்கும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் தமிழக பாஜகவினர் போஸ்டர் ஒட்டி இருப்பதாக பொதுமக்கள் கலாய்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP strike Poster for Amit sha with actor Santhana Bharathi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->