சசிகலா அவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டார் - பாஜக முக்கியப்புள்ளி பேச்சு.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் மற்றும் தேசியக்குழு உறுப்பினர் இல. கணேசன் சாமி தரிசனம் செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு பயனுள்ள சட்டம் ஆகும். இதனை கும்பலொன்று எதிர்க்கிறது. கமலை தனது கூட்டணிக்கு காங்கிரஸ் அழைப்பது, நானும் வீணாக போய்விட்டேன். நீயும் என்னுடன் வா என்பதை போல இருக்கிறது. 

தண்ணீரில் மூழ்குபவன் காப்பாற்ற சென்றவரை நீருக்குள் இழுக்கும் கதை தான் அது. கே.எஸ் அழகிரிக்கு திமுகவில் இடம் அளிக்கப்படுமா? என்று தெரியவில்லை. ஜகத்ராட்சகனை திமுக முதல்வர் வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது. இது திமுக - காங்கிரஸ் கூட்டணி பிளவை உறுதி செய்கிறது. 

ஜெயலலிதாவின் மீது அளப்பரிய விசுவாசம் கொண்டவர் சசிகலா. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு, விசுவாசம் சிறப்புடன் இருந்தது என்பதை அனைவரும் அறிந்தவர்கள் தான். அதிமுக கட்சியே ஜெயலலிதாவின் நினைவாகத்தான் இருக்கிறது. அதிமுகவின் சின்னம் மற்றும் கட்சிக்கு யார் துரோகம் செய்தாலும், அது மறைமுகமாக ஜெயலலிதாவிற்கு செய்வது தான். 

சசிகலா அதிமுகவிற்கு துரோகம் செய்ய மாட்டார். அவர் துரோகம் செய்வார் என்று எதிர்க்கட்சிகள் அரசியல் சூட்சமங்கள் பேசி வருகிறது. அவர் அப்படி எதுவுமே செய்யமாட்டார். அவசரப்பட்டு சசிகலா குறித்து கருத்து கூறுவது பொருத்தமானதல்ல. சசிகலா வந்தபின்னர் பார்த்துக்கொள்ளலாம் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Ganesan Speech about Sasikala 23 Jan 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal