ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் சிக்கியது..கடத்த முயன்ற 2 பேர் கைது
Bidis worth Rs. 80 lakh seized 2 people arrested for attempting to smuggle them
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ம் புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸ்சுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தலைமயிலான போலீசார் தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புல்லாவெளியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு மினி லோடு வண்டியில் கொண்டு வந்த சுமார் 30 கிலோ எடை கொண்ட 42 மூட்டைகள் பீடி இலைகளும், மற்றொரு மினி லோடு வண்டியில் கொண்டு வந்த சுமார் 30 கிலோ எடை கொண்ட 41 மூட்டைகள் பீடி இலைகளும் கியூ பிரிவு போலீசாரால் அப்போது கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த லோடு வண்டிகளின் ஓட்டுநர்களான முள்ளக்காடு, காந்திநகரைச் சேர்ந்த மதியழகன் , திருச்செந்தூர், வெள்ளாளன்விளை, சர்ச் தெருவைச் சேர்ந்த விஷ்பண்ராஜ் பெபின் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகளின் மொத்த மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
English Summary
Bidis worth Rs. 80 lakh seized 2 people arrested for attempting to smuggle them