பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்: சென்னை விடுதிகளில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி ராமேஸ்வரம் என்ற உணவகத்தில் குண்டு வெடித்ததில் பலரும் காயமடைந்தனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முசாவீா் ஹுசைன் சாஹிப், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதியில் இன்று என் ஐ ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இருவரும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து முழு விவரம் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bengaluru blast case NIA officers raid Chennai hotels


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->