திருவண்ணாமலையில் ட்ரோன்கள் பறக்கத் தடை - இது தான் காரணமா? - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சரும், தி.மு.க கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்டோரை ஆதரித்து இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். 

இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருவண்ணாமலையை அடுத்த சோமாசிப்பாடி அருகில் உள்ள சோ.காட்டுக்குளத்தில் இன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கும் இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ், எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஒ.ஜோதி, அ.நல்லதம்பி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். 

இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். இந்த நிலையில் திருவண்ணாமலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு இன்று ஒருநாள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban on trone fly in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->