ஆவடி ரெயில் விபத்து! - முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தண்டவாளத்தில் பலி..! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்த பாபு (60) முன்னாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். கடந்த ஆண்டு நவம்பரில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், மனைவி செல்வி (58) உடன் வாழ்ந்து வந்தார்.

இரு மகனும் மகளும் திருமணமானவர்கள்; தனித்தனியாக வசித்து வருகின்றனர்.மேலும், சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பாபு ஆவடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். ஆனால் சில நாட்களிலேயே வீடைவிட்டு வெளியே சென்ற அவர் திரும்பவில்லை.

இந்த நிலையில், ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் கடக்க முயன்றபோது, அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் அவர் மீது மோதியதில் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Avadi train accident Former Sub Inspector Babu dies tracks What happened


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->