கோயம்பேட்டில் பரபரப்பு..! வாடகை கார், ராபிடோ ஓட்டுநர்கள் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் கற்கள் வீசி தாக்குதல்..!! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி செல்வதற்காக காத்திருந்த வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் ராபிடோ ஓட்டுநர்கள் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் கற்களை கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அவர்கள் அணிந்திருந்த ஹெல்மெட், ப்ளூடூத் மற்றும் வாகனங்களை ஆட்டோ ஓட்டுநர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அதேபோன்று ராபிடோவில் பகுதி நேரமாக வேலை செய்யும் கல்லூரி மாணவர்களை தகாத வார்த்தைகளால் ஆட்டோ ஓட்டுநர்கள் திட்டுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட ராபிடோ ஓட்டுனர்கள் சென்னை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் டூவீலர் கால் டாக்ஸி இயங்கு வரும் நிலையில் பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் அதிகப்படியான டூவீலர் கால் டாக்ஸி சேவை இயங்கி வருகிறது.

பெரும்பாலான டூவீலர் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தங்களது சேவையை வழங்கி வருகின்றனர். மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதால் டூவீலர் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் அதிக அளவில் வருகை புரிவதால் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் மீது கற்களை கொண்டு தாக்குவதாக புகார் அளித்துள்ளனர். 

மேலும் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை ஆட்டோ ஓட்டுநர்கள் சேதப்படுத்தவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சென்னை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Auto drivers attack Rapido drivers at Koyambedu bus stand


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->