இளைஞர்களே ரெடியா.. மதுரையில் ஆகஸ்ட் 5ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


மதுரையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாதமும் தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு கூடுதலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மதுரையில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

இந்த வேலை வாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

August 5 mega employment camp in madurai


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->