ஆகஸ்ட்-18ல் மண்டபம் பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை.!! ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று மாலை 3 நாள் பயணமாக மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் இன்று மாலை மதுரை செல்கிறார்.

மதுரை முனிச்சாலையில் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டி.எம் சவுந்தரராஜனின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இன்று இரவு மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கும் அவர், நாளை காலை கார் மூலம் ராமநாதபுரம் புறப்பட்டு செல்கிறார். நாளை பிற்பகலில் ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரில் ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி , தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த தென்மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் கலோனியா பங்களாவில் நடைபெறும் மீனவர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 50,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ளும் மீனவர்கள் சங்க மாநாட்டினையொட்டி மண்டபம் ஒன்றியத்தில் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

August 18 is a holiday only for Mandapam area schools


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->