#திருப்பூர் :: சமூக ஆர்வலர் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி..!! லாரி உரிமையாளர் உட்பட இருவர் கைது..!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தை அடுத்த காங்கேயம் அருகே நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் செந்தில்குமார். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கனிம வள கொள்ளை தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் பல்வேறு துறைகளில் மனு தாக்கல் செய்து பல்வேறு முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காங்கேயம் அடுத்த நாலுரோடு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த அவர் கொலை முயற்சி அரங்கேறியுள்ளது.

சமூக ஆர்வலர் செந்தில்குமார் ஐவர்ராசா கோயில் பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது டிப்பர் லாரியில் வந்த இரண்டு பேர் செந்தில்குமாரின் காரின் மீது மோதியுள்ளனர். இதில் செந்தில்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் மீண்டும் லாரியை பின்னோக்கி எடுத்து வந்து மோதியுள்ளனர். இதனை அடுத்து லாரியில் இருந்து இறங்கிய இருவர் சுத்தியல் மற்றும் இரும்பு ராடு கொண்டு செந்தில்குமாரை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் லாரி உரிமையாளரான வெங்கடேஷ் மற்றும் லாரி ஓட்டுநர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் தனிபடை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காங்கேயம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attempted murder on a social activist in thirupur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->