சேலத்தில் பரபரப்பு.. "மண் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ மீது கொலை முயற்சி".. காவல் நிலையத்தில் தஞ்சம்..!! - Seithipunal
Seithipunal


மணல் கடத்தல் தொடர்பாக நடக்க எடுத்ததால் கொலை மிரட்டல்..!! காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர்.!!

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் உள்ள மானத்தாள் என்ற கிராமத்தில் அழகுராஜ் என்ற நபர் கடந்த 18ஆம் தேதி டிராக்டர் மூலம் மண் கடத்தியுள்ளார். இது தொடர்பாக எழுந்த புகாரின் பெயரில் கிராமர் நிர்வாக அலுவலராக பணிபுரியும் வினோத்குமார் டிராக்டரையும் மண் அள்ளி உபயோகப்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்து கனி வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

கனிமவளத் துறை அதிகாரிகள் கொளசம்பட்டி காவல் நிலையத்தில் வாகனங்களை ஒப்படைத்து முத்துராஜ் மற்றும் வாகன ஓட்டுனர் விஜய் என்பவர் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் மீது கொளசம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால் தற்பொழுது வரை இரு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மண் கடத்தல் தொழில் பாதிக்கப்பட்டதால் முத்துராஜ் இன்று கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமாரை வழிமறித்து தாக்கியதோடு அவர் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்றுள்ளார்.

மேலும் வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்றுள்ளார். இதனால் அச்சமடைந்த வினோத்குமார் தனது இருசக்கர வாகனத்தில் தப்பித்து கொளசம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதற்கு முன் கிராம நிர்வாக அலுவலர்களாக பணியாற்றி வந்த யாரும் கனிம வள கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரியும் வினோத்குமார் தடுத்துள்ளார். இதன் காரணமாக மானத்தாள் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் மீது இன்று கொலை முயற்சி அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் ஓமலூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களும் முன்பு தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் மணல் கொள்ளை தடுத்ததால் அலுவலகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஓமலூரில் கிராம நிர்வாக அலுவலர் மீது கொலை முயற்சி நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attempt murder on VAO who prevented soil smuggling in salem


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->