சாத்தான்குளம் சம்பவம்! நடவடிக்கைக்கு உள்ளான காவல்துறை அதிகாரிகளுக்கு சில மணி நேரத்தில் புதிய பொறுப்பு!  - Seithipunal
Seithipunal


சாத்தான்குளம் தந்தை மகன் மர்ம மரண விவகாரத்தில் மாஜிஸ்திரேட் விசாரணையின்போது, மாஜிஸ்திரேட் மிரட்டப்பட்டதாக எழுந்த புகாரினை அடுத்து, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி ஏஎஸ்பி, டிஎஸ்பி இருவருக்கும் அடுத்த சில மணி நேரத்தில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் மர்ம மரணத்தை, அனைவரும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

வழக்கு விசாரணைக்கு சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சென்ற மாஜிஸ்திரேட்  பாரதிதாசனை மிரட்டியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து எஸ்.பி. அருண் பாலகோபாலன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. எஸ்.பி. அருண்பாலகோபாலன் இந்தச் சம்பவத்தைக் கையாண்ட விதம் சரியில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து எஸ்.பி. அருண்பாலகோபாலன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து தூத்துக்குடி எஸ்.பி.யாக விழுப்புரம் எஸ்.பி. ஆக இருந்த ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏஎஸ்பி குமார் மற்றும் டிஎஸ்பி பிரதாபனுக்கு உடனடியாக பதவி வழங்கப்பட்டுள்ளது. 

1. தூத்துக்குடி ஏஎஸ்பியாக பதவி வகித்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட குமார் நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2.தூத்துக்குடி டிஎஸ்பியாக இருந்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிரதாபன் புதுகோட்டை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3.நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் கூடுதல் டிஎஸ்பி கோபி தூத்துக்குடி மாவட்ட பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. கள்ளக்குறிச்சி சப் டிவிஷன் டிஎஸ்பி ராமநாதன் சாத்தான்குளம் சப்டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்பி. அருண்பாலகோபாலன் இன்னும் காத்திருப்போர் பட்டியலில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ASP DSP transfers from waiting list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->