நீட் தேர்வால் அரியலூரில் மீண்டும் ஒரு தற்கொலை! கதறி துடிக்கும் பெற்றோர்! - Seithipunal
Seithipunal


மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது, இதனால் மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள்.

மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, சென்னை சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி மற்றும் கோவை சுபஸ்ரீ உள்ளிட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது, அரியலூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த விக்னேஷ் என்ற மாணவன்மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி என்ற கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் - தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகன் விக்னேஷ்(வயது 19) மகன்கள் உள்ளனர். விக்னேஷ் சிறுவயது முதலே டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவில் படித்து வந்துள்ளார். செந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2017 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு  பொதுத் தேர்வில் 1006 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பின்னர் கேரளாவில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையம் மற்றும் துறையூர் சௌடாம்பிகாவிலும் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். 2 முறை நீட் தேர்வு எழுதி ஒருமுறை தோல்வியும் ஒருமுறை தேர்ச்சி பெற்ற நிலையிலும் விக்னேஷ்க்கு டாக்டர் சீட் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத தீவிரமாக படித்து வந்த விக்னேஷ் வருகின்ற 13 தேதி ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் இந்த தேர்விலாவது அதிக மதிப்பெண் பெற்று டாக்டர் ஆக முடியுமா? என கடந்த 2 நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற விக்னேஷ் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்த போது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கிணற்றில் இருந்து சடலமாக விக்னேஷ் உடலை உறவினர்கள் மீட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ariyalur vignesh suicide for neet exam


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->