த.மு.ப தலைவர் வீரலட்சுமிக்கு ஆபாச படம் அனுப்பிய ஆண்டிமடம் ஆரோக்கியசாமி கைது.!! - Seithipunal
Seithipunal


தமிழர் முன்னேற்றப்படை அமைப்பின் தலைவர் கி. வீரலட்சுமி, ஆபாச படங்கள் முகநூலில் அனுப்பி வைக்கப்பட்டதாக குற்றசாட்டை முன்வைத்தார். மேலும், காவல் துறையினரிடம் ஏற்கனவே புகார் அளித்தும் பலனில்லாததால், ஆபாச படம் அனுப்பியவன் தானாக காவல் நிலையத்திற்கு சென்று சரணடைய வேண்டும். 

15 நாட்கள் கேடு முடிந்தும் காவல் நிலையத்தில் சரணடையாத பட்சத்தில், நான் தேடி வந்து அந்த உறுப்பை அறுத்து கொடுத்து அனுப்பிவிடுவேன் என அரிவாளோடு வீடியோ வெளியிட்டார். இந்த விஷயம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், தமிழர் முன்னேற்றப்படை அமைப்பின் தலைவர் கி. வீரலட்சுமிக்கு ஆபாச படம் அனுப்பிய ஆரோக்கியசாமியை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியை சார்ந்த ஆரோக்கியசாமி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறான். 

இவன், கேரளாவில் உள்ள மலப்புரத்தில் ட்ரில்லிங் மெஷின் ஆபரேட்டராக பணியாற்றி வரும் நிலையில், முகநூலில் முதலில் நல்லவன் போல வீரலட்சுமியிடம் பேசி, அவரது பதிவுகளுக்கு கமன்ட் செய்து பின்னர் ஆபாச படத்தை அனுப்பியது அம்பலமானது. நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்ட ஆரோக்கியசாமி, நள்ளிரவில் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டான். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸின் வீரியத்தை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ariyalur Andimadam culprit Arrest by Chennai Shankar Nagar police Case of K Veeralatsumi Issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->