நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

பள்ளி கல்வித்துறையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளின் மீதான வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிவொளி ஆஜராகி இருந்தார்.

அப்போது நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் அலட்சியம் செய்யும் அதிகாரிகளை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் துணை போக வேண்டாம் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

பள்ளி கல்வித்துறையில் மட்டுமே அதிக அளவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உள்ளதாகவும் நீதிபதி பட்டு தேவானந்த் வேதனை தெரிவித்தார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பதே இல்லை என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார்,

மேலும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இனி இது போல் நடக்க கூடாது என்று அறிவுரையும் வழங்கினார்.

கடையநல்லூர் ஆசிரியை கலைச்செல்வி ஊதிய உயர்வு கோரிய வழக்கில், நீதிமன்ற  உத்தரவை நிறைவேற்ற வில்லை என்று தொடரப்பட்ட இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arivoli Apology to Chennai HC Division case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->