சொந்த ஊர் போறீங்களா...? கோடை விடுமுறை, அமாவாசையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பேருந்துகள் ரெடி...!
Are you going your hometown 200 special buses ready Salem division summer vacation and Amavasya
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேலம் கோட்டத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பயணிகள் நெரிசலை சமாளிக்கும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் தொடர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கோடை விடுமுறை மற்றும் அமாவாசையை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில் இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை சேலம் கோட்டம் முழுவதும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையம், பெங்களூரு, சென்னை, ஒசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நகர பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு ஊர்களை இணைக்கும் வகையில் கூடுதல் பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.அதேபோல், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூர், தர்மபுரி மற்றும் மேட்டூர் பகுதிகளுக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சீபுரம் மற்றும் பெங்களூருவுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூருக்கும், ஒசூரில் இருந்து சேலம், சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, கோவை மற்றும் திருப்பூருக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதனுடன், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருவண்ணாமலை மற்றும் ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும் சிறப்பு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமாவாசையை முன்னிட்டு இன்று சேலம் மற்றும் தர்மபுரி பகுதிகளில் இருந்து மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாதேஸ்வரன் மலைக்கு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தர் கோவிலுக்கும் கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் நெரிசலை தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் குணசேகரன் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Are you going your hometown 200 special buses ready Salem division summer vacation and Amavasya