ரூ.992 கோடி ஊழல்.. இன்னும் எவ்வளவு ஆதாரம் வேண்டும் முதல்வரே..? அறப்போர் இயக்கம் வெளியிட்ட வீடியோ!
Arappor Iyakkam DMK Govt Scam
கிறிஸ்டி ஊழலின் ஆதாரம் கண் முன்னே இங்கு தெரியவில்லையா முதலமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சரே? என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "ஒப்பந்தம் படி சப் கான்ட்ராக்ட் செய்யக்கூடாது. ஆனால் கிறிஸ்டி நிறுவனத்திடம் அனுபவமோ லாரியோ இல்லையே. சப் கான்ட்ராக்டர்கள் வைத்து தான் ஓட்டி வருகிறார்கள் என்பதற்கு இந்த ஆதாரம் போதுமா அமைச்சரே? சப் கான்ட்ராக்ட் செய்யும் லாரி உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்கள். இதுவே தெளிவான ஆதாரம்.
டன் ஒன்றுக்கு ரூபாய் 598 அதாவது அரசு நிர்ணயித்த விலையை விட இரண்டு மடங்கு கிறிஸ்டிக்கு ஊழல் ஒப்பந்தமாக கொடுக்கப்பட்டுள்ளது. சப் காண்ட்ராக்டர்களுக்கு 320 கொடுத்து ஓட்டிக் கொண்டிருக்கிறது கிறிஸ்டி நிறுவனம் என்பது அப்பட்டமாக தெரியவில்லையா அமைச்சரே?? 320 ரூபாய்க்கு இத்தனை நாளாக ஓட்டி வந்துள்ளனர் என்றால் அதை ஏன் அரசே நேரடியாக செய்யவில்லை அமைச்சரே?? இந்த ஊழலால் அரசு இழக்கும் 992 கோடி பணத்தில் எந்தெந்த பொது ஊழியர்களுக்கு எவ்வளவு ரூபாய் பங்கு அமைச்சரே??
அனுபவம் உள்ள லாரி உரிமையாளர்கள் யாரும் பங்கு பெற முடியாது.. கிறிஸ்டி நிறுவனம் மட்டுமே தேர்ச்சி பெறும் என்று உங்கள் துறை செய்யும் இந்த ஊழலை இன்றுடன் நிறுத்துவீர்களா??
கிறிஸ்டி நிறுவன ஊழலை ஏன் இந்த அளவிற்கு தரம் இறங்கி ஆதரிக்கிறீர்கள் என்பதை மக்களிடம் வெளிப்படையாக சொல்வீர்களா?? இனியும் நீங்கள் முழு பூசணிக்காயை மறைக்க நினைக்க வேண்டாம் அமைச்சரே.. உங்கள் சாயும் வெளுத்து விட்டது!
உடனடியாக கிறிஸ்டி ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள்.. அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நிறுத்துங்கள். அனைத்து அனுபவமுள்ள லாரி உரிமையாளர்களும் பங்கு பெறும் வகையில் ஒப்பந்த விதிகளை மாற்றுங்கள். எங்கள் கஜானாவை இது போன்ற ஊழல்கள் மூலமாக காலி செய்வதை நிறுத்துவீர்களா அமைச்சரே?? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
Arappor Iyakkam DMK Govt Scam