பேருந்தை அதிவேகத்தில் இயக்கி மக்களை கதறவைத்த மாக்கான்கள்.. கலெக்சன் பாதிக்கப்படுவதாக அடிதடி சண்டை..! - Seithipunal
Seithipunal


மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பெரியகுளத்திற்கு அரசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த அரசு பேருந்தை உதயசூரியன் என்பவர் இயக்கிய நிலையில், இந்த பேருந்திற்கு பின்னாலேயே தனியார் பேருந்து ஒன்றும் பெரியகுளத்திற்கு புறப்பட்டுள்ளது. 

பேருந்தை யார் முதலில் இயக்கி, ஆட்களை ஏற்றிச் செல்வது என்பது தொடர்பான பிரச்சனையிலேயே இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் வாகனத்தை இயக்கியுள்ளனர். பெரியகுளம் செல்லும் வழியில் உள்ள ஊர்களான பள்ளப்பட்டி, நிலக்கோட்டை என இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு கொண்டே அதிவேகத்தில் பேருந்தை இயக்கி சென்றுள்ளனர். 

இதனால் பதறிப்போன பயணிகள் பேருந்தில் உயிரை கையில் பிடித்தவாறு பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த பேருந்து வத்தலகுண்டு பேருந்து நிலையத்திற்குள் சென்றதும், எதிரெதிர் திசையில் குறுக்கே வந்து வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும், அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் தங்களது வாகனத்தில் கலெக்ஷன் குறைத்து விட்டதாக குற்றம் சாட்டிய தனியார் பேருந்து ஓட்டுனரும், பயணசீட்டு பரிசோதகரும் ஆத்திரத்தில் அரசு பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்து உதைத்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில், வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனியார் பேருந்து ஊழியர்களான முத்துகாளை மற்றும் ராஜேஷ்கண்ணா ஆகியோரை கைது செய்துள்ளனர். 

ஏற்கனவே மதுரையில் இருந்து திண்டுக்கல், இராஜபாளையம், தேனி, இராமநாதபுரம், பரமக்குடி போன்ற நகரங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் விமானத்தை இயக்குவது போல் அதிவேகத்தில் செல்வதாக பல புகார்களும் எழுந்துள்ள நிலையில், இதனால் பல கொடூர விபத்துகளும் அரங்கேறியுள்ளது.

இப்படியான சூழ்நிலையில், கலக்சனிற்கு ஆசைப்பட்டு மக்களின் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேருந்தை இயக்கி விட்டு, கலெக்ஷன் குறைவு என்று ஓட்டுனர்கள் சண்டையிட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பேருந்துகளின் உரிமங்களை பறித்து அவர்களுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arapalayam to Theni Bus Govt and Private Drivers fight Rash Driving and Worried Collection


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->