அண்ணாமலை புத்திசாலி! அரசியலில் விஜய் அரசியலில் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம்- ரஜினி சகோதரர் பரபரப்பு பேட்டி - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் நடிகர் விஜய் தனது அரசியல் அறிமுகத்தைத் திட்டமிட்டு நகர்கிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அவர் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க) மீது சமூக வலைதளங்களில் பெரும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது அரசியல் எதிர்காலம் குறித்தும், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் நிலைபாடுகள் குறித்தும் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் வெளியிட்டுள்ள கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கரும்பிள்ளை மடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சத்தியநாராயண ராவ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்பவே கஷ்டம். அவர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் அதிகம்,” என்றார்.

அதே நேரத்தில் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பற்றி பேசும் அவர், “அண்ணாமலை புத்திசாலி. அவர் மிகவும் நன்றாக வருவார். எதிர்காலத்தில் தமிழக அரசியலில் பெரிய வரவேற்பைப் பெறுவார்,” என்று பாராட்டினார்.

மேலும், “ரஜினிகாந்த் எம்பியாகவோ அல்லது கவர்னராகவோ வர வாய்ப்பா?” எனக் கேட்டபோது, “அவருக்கு கவர்னராக வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் அதனை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். எம்பி பதவி தேவையில்லை எனவும் அவர் கூறிவிட்டார்,” எனத் தெரிவித்தார். இதன் மூலம், ரஜினிகாந்த் எந்தவொரு அரசியல் பதவியிலும் ஈடுபட விருப்பமில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சத்தியநாராயண ராவ் வெளியிட்டுள்ள இந்தக் கருத்துகள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்துக்கு உரியதாக உள்ளன. குறிப்பாக, விஜய்யின் அரசியல் பயணத்தின் வெற்றிக்கு சந்தேகம் எழுப்பும் வகையிலும், அண்ணாமலையின் அரசியல் வளர்ச்சியை வலியுறுத்தும் விதத்திலும் அவரது பேச்சுகள் அமைந்துள்ளன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai is smart Vijay is very difficult to win in politics Rajini brother sensational interview


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->