விஜய்யுடன் கூட்டணியா? கமலஹாசன் சொன்ன அந்த பதில்! - Seithipunal
Seithipunal



மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கமலஹாசன் கட்சியின் 7ம் ஆண்டு துவக்க விழாவை கோலாகலமாக கொண்டாடினார். 

இந்த விழாவை தொடர்ந்து கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது விஜய் முழு நேர அரசியலுக்கு வருவது தொடர்பாகவும் அவருடன் கூட்டணி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு கமலஹாசன், சினிமாவை விட்டு முழு நேர அரசியலில் இறங்குவது அவரது இஷ்டம். அது அவரது பாணி. நான் விஜய்யுடன் ஏற்கனவே பேசி உள்ளேன்.

அவர் அரசியலுக்குள் நுழைந்ததும் முதல் வரவேற்பு என்னுடையது தான் என பதிலளித்துள்ளார். மேலும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் இறுதியானவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alliance with Vijay answer by Kamal Haasan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->