21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுவா...? கடும் நடவடிக்கை பாயும்...! - டாஸ்மாக் அதிரடி எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து மதுவிற்பனை கட்டுப்பாடுகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் தொடர்பான நடைமுறைகளில் தீவிர சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் பணியில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு அருகில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அந்த உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் நடைமுறைகளையும் கடுமையாக ஒழுங்குபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மதுபானம் அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இளம் தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003-இல் விதி 11ஏ கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த விதிப்படி, 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்யவோ அல்லது வழங்கவோ கூடாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தற்போது கடை பணியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு எதிராக துறைரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறும் பணியாளர்களுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறார்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், இந்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Alcohol for those under 21 years age Strict action taken TASMAC warns action


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->